உக்ரேனில் இருந்து ர‌ஷ்யா வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் அதிபர் புட்டின்

உக்ரேனில் இருந்து ர‌ஷ்யா வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் அதிபர் புட்டின்

1 mins read
21e43cc5-d5ee-423a-9e4d-a342a9ba78d0
-

உக்ரேன் மீது ர‌ஷ்யா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்தும் சண்டை முடிந்தபாடில்லை. இந்நிலையில், உக்ரேனில் இருந்து ர‌ஷ்யாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்க ஆணை பிறப்பித்துள்ளார் ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்.

பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையில் இன்று(ஆகஸ்ட் 28) அவர் கையெழுத்திட்டார். ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட உக்ரேனை விட்டு ர‌ஷ்யாவிற்கு வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

கடந்த பிப்ரவரி 18 முதல் உக்ரேனை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கு 10,000 ரூபிள் மாதாந்திர ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.