காத்திருக்கச் சொல்லும் மலேசியப் பிரதமர்

காத்திருக்கச் சொல்லும் மலேசியப் பிரதமர்

1 mins read
36c13523-559a-4521-8f5b-8381e1e92550
-

செர்­டாங்: மலே­சிய நாடா­ளு­

மன்­றத்­தைக் கலைத்து பொதுத் தேர்­த­லுக்­கான தேதியை அறி­விக்­கும்­படி அந்­நாட்­டில் பல­த­ரப்­பி­னர் விடுத்­துள்ள கோரிக்­கைக்கு மலே­சி­யப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் ஒரே வார்த்தையில் பதி­ல­ளித்­துள்­ளார்.

"காத்­தி­ருங்­கள்," என்று செர்­டாங்­கில் உள்ள மலே­சிய வேளாண்­மைப் பூங்­கா­வில் நடை­பெற்ற சமூக மேம்­பாட்­டுத் துறை­யின் 60ஆம் ஆண்டு கூட்­டத்­துக்­குப் பிறகு அவர் செய்­தி­

யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று அண்மையில் அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி அழைப்பு விடுத்தார். இல்லாவிடில் தேசிய முன்னனி கூட்டணி தோற்கும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.