இந்தோனீசியாவில் நிலநடுக்கம்

இந்தோனீசியாவில் நிலநடுக்கம்

1 mins read
c3ce7b57-159d-49a3-824e-4539164eb44e
-

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, புவிஇயற்பியல் முகமை சொன்னது.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 5 ரிக்டர் அளவில் தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்களும் ஒருமுறை

6 ரிக்டருக்கு அதிகமான நிலநடுக்கமும் ஏற்பட்டன. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும் நிலை ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.

சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன. அதே சமயம் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.