விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரிசி விலையை உயர்ந்த வியட்னாம், தாய்லாந்து திட்டம்

விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரிசி விலையை உயர்ந்த வியட்னாம், தாய்லாந்து திட்டம்

1 mins read
90868c5a-f287-4566-8749-f8856d4c4905
-

­பேங்­காக்: அனைத்­து­லக சந்­தை­யில் அரிசி விலையை உயர்த்­து­வ­தற்கு ஒன்­று­டன் ஒன்று ஒத்­து­ழைக்க தாய்­லாந்­தும் வியட்­னா­மும் ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக தாய்­லாந்து விவ­சா­யத் துறை அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

சென்ற மே மாதம் முதல் இது­கு­றித்து இரு­நா­டு­களும் பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்டு வந்­த­தாக தாய்­லாந்து விவ­சா­யத் துறை அமைச்­ச­ரின் ஆலோ­ச­கர் அலோங்­கான் போன்­லா­போட் சொன்­னார்.

உல­கச் சந்­தை­யில் தங்­க­ளின் செல்­வாக்கை அதி­க­ரிப்­ப­தும் தம் நாட்டு விவ­சா­யி­க­ளின் வரு­வாயை அதி­க­ரிப்­ப­துமே, ஏற்­று­மதி அரி­சி­யின் விலையை உயர்த்­து­வ­தன் நோக்­கம் என்று தாய்­லாந்து செய்­தித் தொடர்­பா­ளர் சொன்­னார்.

வியட்­னாம் தரப்­பில் இருந்து இது பற்றி எந்தவித தக­வ­லும் இல்லை.

மேலும் எப்­போது முதல் இந்த விலை உயர்வு நடப்­புக்கு வரும் என்­ப­தும் தெளி­வாக தெரி­ய­வில்லை.

அனைத்­து­லக அள­வில் இரு நாடு­க­ளின் அரிசி உற்­பத்தி 10 விழுக்­கா­டா­க­வும் அரிசி ஏற்­று­மதி 26 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது என்று அமெ­ரிக்க விவ­சா­யத் துறை­யின் புள்­ளி­வி­வ­ரம் கூறு­கிறது.