பெய்ஜிங்: சீனாவில் உணவகம் ஒன்றில் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் 28 பேர்மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக வழக்கறிஞர்கள் கூறினர்.
அவர்களில் 7 பேர் தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் என காவல்துறை சொன்னது.
பெய்ஜிங் அருகேயுள்ள டாங்ஷான் வட்டார உணவகம் ஒன்றில் சில ஆடவர்கள் 4 பெண்களைத் தாக்கும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
ஆடவர்கள் கொடுத்த முன்பணத்தை அவர்கள் வாங்க மறுத்ததால், பெண்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த இரண்டு பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, டாங்ஷான் வட்டாரத்தின் துணை தலைமை போலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

