பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டாலர் நிதியுதவி

பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டாலர் நிதியுதவி

1 mins read
37ab9a63-737d-4b2e-af9f-584cfba2e19b
-

வாஷிங்டன்: இலங்கையை அடுத்து தற்போது பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அனைத்துலக நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) அந்நாடு நிதியுதவி கோரியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் இன்று ஆலோசனை நடத்தியது.

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர்களை வழங்க அனைத்துலக நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.