ஜப்பானில் வேலைக்கு 'ஆள்' தேவை: நினைத்த நேரம் வேலை, உணவு, ஓய்வு

ஜப்பானில் வேலைக்கு 'ஆள்' தேவை: நினைத்த நேரம் வேலை, உணவு, ஓய்வு

1 mins read
0f759da9-abc8-4d96-9177-7727fe811abf
-

தென் ஜப்பானில் உள்ள ஒரு தாதிமை இல்லத்தில் வேலைக்கு ஆள் தேவை.

இந்த வேலைக்கு வருவோர் எப்போது வேண்டுமென்றாலும் வேலைக்கு வரலாம், நினைத்த நேரம் தூங்கலாம், சாப்பிடலாம் அல்லது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

அவர்கள் செய்ய வேண்டியது; தாதிமை இல்லத்தில் உள்ளோருக்குத் துணையாக இருக்க வேண்டும், அவர்களைச் சிரிக்கவைக்க வேண்டும்

ஆனால் அந்த வேலைக்குத் தகுதி பெறுவோரின் வயது நான்குக்கும் குறைவாக இருக்க வேண்டும். அவர்களுக்கான சம்பளம்; பேம்பர்ஸ் மற்றும் பால் மாவு.

ஆம், ஜப்பானின் கிட்டாக்யு‌ஷுவில் உள்ள இந்த தாதிமை இல்லத்தின் இந்த வேலைக்கு ஏற்கெனவே 30 குழந்தைகள் பதிவு செய்துவிட்டனர். சராசரியாக 80 வயதுகளில் இருக்கும் அந்த தாதிமை இல்லத்தில் இருக்கும் மூத்தோரின் தனிமையைப் போக்கி அவர்களுக்குப் புத்துயிர் அளிக்க இந்த புதிய முயற்சி கையாளப்பட்டு வருகிறது.

"குழந்தைகளைப் பார்த்தாலே இல்லத்தில் உள்ள முதியவர்கள் சிரிக்கத் தொடங்குகின்றனர். இந்த வேலையில் இந்த நேரம்தான் வரவேண்டும் என்று இல்லை," என்று கூறினார் தாதிமை இல்லத்தின் தலைமை தாதி குமாரி கிம்மி கொன்டோ.

வேலைக்குத் தகுதி பெறுவோரின் ஒரே 'வேலை' - அந்த முதியோரிடம் அவ்வப்போது 'வாக்கிங்' போக வேண்டும்.

தற்பொழுது அந்த குழந்தைகள் முதியோரிடம் பேசி, கட்டிப்பிடித்து, நேரம் செலவழித்து மகிழ்விக்கின்றன.

குழந்தைகள் வேலைக்கு வருவதால் தாதிமை இல்ல முதியோரின் முகத்திலும் மிகிழ்ச்சி, அந்த நேரத்திலாவது ஓய்வு கிடைக்கிறதே என்று பெற்றோரின் முகத்திலும் மகிழ்ச்சி.