பாக்தாத்தில் வன்முறை; குறைந்தது 23 பேர் பலி

பாக்தாத்தில் வன்முறை; குறைந்தது 23 பேர் பலி

2 mins read
eb3e1187-280b-4782-aa01-d0a526518f4b
சமயப் போதகர் முக்தாடா அல் சடாரின் ஆதரவாளர்களுக்கும் ஈராக்கியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் மாண்டனர், பலர் காயமுற்றனர். படம்: இபிஏ -

பாக்­தாத்: ஈராக்­கில் அதிக செல்­வாக்­கு­மிக்க சம­யப் போத­கர் முக்­தாடா அல் சடார் அர­சி­ய­லிலி­ருந்து வில­கி­யதை அடுத்து அந்­நாட்­டின் தலை­ந­கர் பாக்­தாத்­தில் வன்­முறை வெடித்­துள்­ளது.

பாது­காப்­புப் படை­யி­ன­ரு­டன் அல் சடா­ரின் ஆத­ர­வா­ளர்­கள் மோதி­யதை அடுத்து குறைந்­தது 23 ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மாண்­ட­னர். ஈராக்­கில் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில் நடை­பெற்ற தேர்­த­லில் இஸ்­லாத்­தின் ஷியா பிரிவின் சம­யப் போத­க­ரான அல் சடார் பெரும்­பா­லான தொகு­தி­

க­ளைக் கைப்­பற்­றி­னார்.

ஆனால் ஈரா­னின் ஆத­ர­வைப் பெற்ற மற்ற ஷியா கட்­சி­கள் அவ­ரு­டன் கூட்­டணி அமைக்க விரும்­பா­த­தால் அல் சடா­ரால் அர­சாங்­கத்தை அமைக்க முடி­யா­மல் போனது.

நீண்ட இழு­ப­றிக்­குப் பிறகு அர­சி­ய­லி­லி­ருந்து வில­கு­வ­தாக அல் சடார் அறி­வித்­தார்.

அல் சடா­ரின் ஆத­ர­வா­ளர்­கள் நேற்று முன்­தி­னம் அர­சாங்க மாளி­கைக்­குள் அத்­து­மீறி நுழைந்­த­னர்.

இத­னால் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் ரத்து செய்­யப்­படும் சூழல் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, நாடு தழு­விய ஊர­டங்கை ஈராக்­கிய ராணு­வம் அறி­வித்­தது.

ஈராக்­கில் வன்­முறை தலை

­வி­ரித்­தா­டு­வ­தால் அந்­நாட்­டுக்­குச் செல்ல இருந்த விமா­னச் சேவை­களை ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் ரத்து செய்­துள்­ளன.

ஈராக்­கு­ட­னான எல்­லையை ஈரான் மூடி­யது. இத­னால் ஷியா முஸ்­லிம்­க­ளின் புனி­தத் தல­மான கர்­பாலா நக­ரக்கு யாத்­திரை மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­டி­ருந்த மில்­லி­யன்­க­ணக்­கான யாத்­தி­ரீ­கர்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பாக்­தாத்­துக்­குத் தெற்­கில் உள்ள நஜாஃப் நக­ரி­லி­ருந்து ஈரா­னிய யாத்­தி­ரீ­கர்­களை வெளி­யேற்ற இரண்டு அவ­ச­ர­கால விமா­னங்­களை ஈரான் அனுப்­பத் திட்­ட­மிட்­டுள்­ளது. ஈராக்­கில் இருக்­கும் தனது நாட்­டி­னர் உட­ன­டி­யாக நாடு திரும்ப வேண்­டும் என்று குவைத் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதிக கச்சா எண்ணெய் ஏற்றமதி செய்யும் நாடுகளில் ஈராக் இரண்டாவது இடத்தில் உள்ளது. வன்முறை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகமும் விலையும் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி தலைநகர் பாக்தாத்தில் மட்டும் வன்முறை வெடித்துள்ளது.

ஈராக்கின் முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி மையம் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பஸ்‌ராவில் இருப்பதாகவும் அது பாக்தாத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் கச்சா எண்ணெய் தொடர்பான பாதிப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது.