கார்கிவ் நகர் மீது குண்டு மழை; குறைந்தது ஐவர் மரணம்

கார்கிவ் நகர் மீது குண்டு மழை; குறைந்தது ஐவர் மரணம்

1 mins read
1f94d701-110e-4aa8-ae4c-eb9d974ea612
-

கியவ்: உக்­ரே­னின் இரண்­டா­வது ஆகப் பெரிய நக­ர­மான கார்­கிவ்வை ரஷ்­யப் படை­கள் குறி­வைத்து குண்டு மழை பொழிந்­த­தாக அந்­ந­க­ரின் மேயர் இகோர் தெரேக்­கோவ் நேற்று தெரி­வித்­தார்.

தாக்­கு­த­லில் குறைந்­தது ஐந்து பேர் மாண்­ட­தாக அவர் கூறி­னார்.

ஏழு பேர் காய­முற்­ற­தாக தமது டெலி­கி­ராம் கணக்­கில் அவர் பதி­விட்­டார். ரஷ்யா நடத்­தும் தாக்­கு­தல்­க­ளால் பாதிப்­ப­டை­யா­மல் இருக்க அமைக்­கப்­பட்­டுள்ள இடங்­களை விட்டு வெளி­யேற வேண்­டாம் என்று கார்­கிவ் மக்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

ரஷ்­யப் படை­கள் கார்­கிவ் நகரை அவற்­றின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வர முயன்று வரு­கின்­றன.