அதிகரிக்கும் விலைவாசி, கடன்; குறைந்தபட்ச நாள் சம்பளத்தை உயர்த்தும் தாய்லாந்து

அதிகரிக்கும் விலைவாசி, கடன்; குறைந்தபட்ச நாள் சம்பளத்தை உயர்த்தும் தாய்லாந்து

1 mins read
ddf311b8-6393-4855-8988-99a2fc104c3a
-

பேங்­காக்: விலை­வாசி, குடும்­பச் செல­வு­க­ளுக்­காக வாங்­கும் கடன்­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் குறைந்­த­பட்ச நாள் சம்­ப­ளத்தை தாய்­லாந்து உயர்த்த இருக்­கிறது.

உய­ரும் விலை­வா­சி­யைச் சமா­ளிக்க ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் வரும் அக்­டோ­பர் மாதத்­தி­லி­ருந்து நாள் சம்­ப­ளம் சரா­ச­ரி­யாக 5.02 விழுக்­காடு உயர்த்­தப்­படும் என்று தாய்­லாந்­தின் மனி­த­வள அமைச்சு கூறி­யது.

இதன்­மூ­லம் சரா­சரி குறைந்­த­பட்ச நாள் சம்­ப­ளம் 337 பாட்­டாக ($12.92) ஏற்­றம் காணும்.

நாள் சம்­ப­ளம் ஆகக் கடை­சி­யாக இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு உயர்த்­தப்­பட்­டது.

தாய்­லாந்­தின் பண­வீக்­கம் ஐந்­தி­லி­ருந்து ஆறு விழுக்­காடு வரை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­றும் ஆகை­யால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள நாள் சம்­பள அதி­க­ரிப்பு நியா­ய­மா­னது என்­றும் பொரு­ளி­யல் நிபு­ணர் நொனா­ரிட் பிசோன்­யா­புட் தெரி­வித்­தார்.

"அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்து உயிர் பிழைக்க மட்­டுமே இந்த நாள் சம்­பள அதி­க­ரிப்பு குறைந்த வரு­மான ஊழி­யர்­

க­ளுக்­குப் போது­மா­ன­தாக இருக்­கும்," என்று தாய்­லாந்து மேம்­பாட்டு ஆய்­வுக் கழ­கத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ள­ரான டாக்­டர் நொனா­ரிட் தெரி­வித்­தார்.