தைவான் அதிபர்: அடங்கிப் போவதால் பதிலடி கொடுக்கமாட்டோம் எனக் கருதிவிடக்கூடாது

தைவான் அதிபர்: அடங்கிப் போவதால் பதிலடி கொடுக்கமாட்டோம் எனக் கருதிவிடக்கூடாது

1 mins read
d5a6ccb9-5fcb-45ed-a1ba-d8afd2cc2ff2
-

தைப்பே: சீனா எவ்­வ­ள­வு­தான் சின­மூட்­டி­னா­லும் தைவான் அமைதி காக்­கும் என்று தைவான் அதி­பர் சாய் இங் வென் தெரி­வித்­தார்.

ஆனால் அடங்­கிப் போவ­தால் தைவான் பதி­லடி கொடுக்­காது என்று சீனா கரு­தி­வி­டக்­கூ­டாது என்று அவர் நேற்று எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

தைவான் நீரி­ணை­யில் தைவா­னின் கட்­டுப்­பாட்­டில் உள்ள தீவு­களில் உள்ள ராணுவ வீரர்­களை அவர் நேற்று நேர­டி­யா­கச் சென்று பார்த்­தார்.

அண்­மை­யில் அமெ­ரிக்க

அர­சி­யல்­வா­தி­கள் தைவா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­தால் அதி­ருப்தி அடைந்த சீனா, போர்ப் பயிற்சி­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்­கா­வின் அரி­சோனா மாநி­லத்­தின் ஆளு­நர் டக் டுசி தைவா­னுக்­குப் பய­ணம் மேற்­கொள்ள இருப்­ப­தாக தைவான் கூறி­யது.