பாகிஸ்தான் வெள்ளம்: நிதியுதவி கோரும் ஐநா

பாகிஸ்தான் வெள்ளம்: நிதியுதவி கோரும் ஐநா

1 mins read
a28af381-17d6-4851-98a5-39e4f56e90d4
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாண்டவம் ஆடும் வெள்ளத்தால் 1,100க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர். பல உள்கட்டமைப்புகளும் வயல்களும் உருத்தெரியாமல் அழிந்தன. கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாக ஏறத்தாழ 33 மில்லியன் பேர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடரைச் சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் 160 மில்லியன் அமெரிக்க டாலர் ($223.15 மில்லியன்) நிதியுதவிக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. வெள்ளம் காரணமாக பாகிஸ்தானில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக பாகிஸ்தானில் மிகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருப்பதாலும் அதனால் உதவி செய்வது உலக நாடுகளின் கடமை என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக மலைகளிலிருந்து நதிகள் பாய்ந்தோடி திடீர் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, பல கட்டடங்கள், பாலங்கள் இடிந்து விழுந்தன.

கண்களுக்கு எட்டிய தூரத்தில் சாலைகளைப் பார்க்க முடிவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.