சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர் கோர்பசாவ் காலமானார்

சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர் கோர்பசாவ் காலமானார்

1 mins read
eb3facc8-dc94-4075-9b70-41741634eded
படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்த மிகைல் கோர்பசோவ் காலமானார். அவருக்கு வயது 91.

சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக திகழ்ந்த திரு கோர்பசோவ், சோவியத் ஒன்றியத்தை உலக நாடுகளுக்கு திறந்துவிட்டவர்.

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த திரு கோர்பசோவ் நேற்று இரவு காலமானார்.

இவருடைய மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துகொண்டார்.

1990ல் திரு கோர்பசோவிற்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

தலைநகர் ரஷ்யாவில் உள்ள ஒரு இடுகாட்டில் தனது மனைவிக்கு அருகிலேயே திரு கோர்பசோவ் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.