ஃபிளாப்பி டிஸ்க்கை ஒழிக்க ஜப்பான் நடவடிக்கை

ஃபிளாப்பி டிஸ்க்கை ஒழிக்க ஜப்பான் நடவடிக்கை

1 mins read
1fd9ac10-9eb7-4548-b0a8-96ae0adda753
மின் ஆவணங்கள், மின் கோப்புகள் உள்ளிட்டவற்றை வைக்க ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட 'ஃபிளாப்பி டிஸ்க்குகள். மேல்காணும் கோப்புப் படம்: நியூ பேப்பர்1971ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் உருவாக்கிய ஃபிளாப்பி டிஸ்கெட். கோப்புப் படம்: ஐபிஎம் -
multi-img1 of 2

பயன்­பாட்­டில் இல்­லாத சாத­னங்­களை உப­யோ­கிப்­பதை நிறுத்த ஜப்­பான் நட­வ­டிக்கை எடுக்­கிறது. இதை­யொட்டி பல ஆண்­டு­களுக்கு முன்பு பய­ன்ப­டுத்­தப்­பட்ட ஃபிளாப்பி டிஸ்க் மின் சேக­ரிப்பு சாத­னத்­திற்கு எதி­ராக அந்­நாடு 'போர்' தொடுத்­துள்­ளது.

தற்­போது ஜப்­பா­னில் சுமார் 1,900 அர­சாங்க நட­வ­டிக்­கை­க­ளுக்கு இன்­ன­மும் 'ஃபிளாப்பி டிஸ்க் உள்­ளிட்ட மிக­வும் பழை­மை­யான சாத­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அத்­த­கைய சாத­னங்­கள் முழு­மை­யாக விலக்­கப்­ப­ட­வேண்­டும் என்று அந்­நாட்­டின் மின்­னி­லக்­கத் துறை அமைச்­சர் டாரோ கோனோ நேற்று டுவிட்­ட­ரில் குறிப்­பிட்டிருந்தார்.

இதற்­கு ஜப்பானியப் பிர­த­மர் ஃபுமியோ கிஷி­டா­வின் முழு ஆத­ரவு வழங்­கு­வ­தா­க­வும் திரு கோனோ நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

ஜப்­பா­னைப் போல் வேறு சில நாடு­களும் பயன்­பாட்­டில் இல்­லாத தொழில்­நுட்ப சாத­னங்­க­ளைக் கைவிட சிர­மப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக 2019ஆம் ஆண்­டில்­தான் அமெ­ரிக்­கா­வின் தற்­காப்பு அமைச்சு ஃபிளாப்பி டிஸ்க்குக­ளைப் பயன்­ப­டுத்­து­வதை நிறுத்­தி­யது.

ஃபிளாப்பி டிஸ்க் 1960களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. ஜப்­பா­னின் 'சோனி' நிறு­வ­னம் 2011ஆம் ஆண்­டில் இவற்றை உற்­பத்தி செய்­வதை நிறுத்­தி­யது.

இன்­றைய இளை­யர்­கள் ஃபிளாப்பி டிஸ்க்கை அடை­யா­ளம் காணத் தெரி­யா­மல் இருந்­தா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

ஆனால் அந்த காலத்­தில் ஃபிளாப்பி டிஸ்க் இல்­லா­விட்­டால் பள்­ளி­யிலோ அலு­வ­ல­கத்­திலோ கணி­னி­யில் வேலை பார்ப்­பது நினைத்­துப் பார்க்­க­மு­டி­யாத ஒன்­றாக இருந்தது.