உலகத்தை வதைத்து வரும் இயற்கைச் சீற்றம்

உலகத்தை வதைத்து வரும் இயற்கைச் சீற்றம்

1 mins read
16d10249-deb2-4123-a045-847c48154036
ஹினம்­னோர் பெரும்­பு­யல் தென்கொரியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காயில் நேற்றே அதன் தாக்கத்தால் கனமழை பெய்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

சோல்: தென்­கொ­ரி­யா­வின் வர­லாற்­றி­லேயே மோச­மான புயல் அடுத்த சில நாளில் தாக்கி பெருத்த சேதத்தை ஏற்­ப­டுத்­தும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

ஹினம்­னோர் எனும் பெரும்­பு­யல் இன்று அல்­லது நாளை ஜப்­பா­னை­யும் தென் கொரி­யா­வை­யும் தாக்­கும் என்று பன்­னாட்டு வானிலை நிலை­யங்­கள் கூறின.

இந்­நி­லை­யில் இங்­கி­லாந்­தில் வெப்பநிலைப் பதிவு செய்யப்படத் தொடங்கியது முதல் இவ்வாண்டு தான்ஆக மோச­மான கோடைக்­கா­லம் நில­வி­ய­தா­கக் புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறி­யுள்­ளன. 2018ஆம் ஆண்டு அங்கு நில­விய கோடைக்­கா­லத்­துக்கு இது ஒப்­பா­னது. இங்­கி­லாந்­தி­லும் பல ஐரோப்­பிய நாடு­க­ளி­லும் பெரும் வறட்சி நில­வி­யது.

இதற்­கி­டையே பாகிஸ்­தா­னில் ஏற்­பட்ட ஆக மோச­மான வெள்­ளத்­தில் சிக்­கிய 2,000 பேரை அதி­கா­ரி­கள் காப்­பாற்­றி­யுள்­ளனர்.