புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று அதை திறப்பதற்கு முன்னரே இரண்டாக உடைந்து விழுந்தது. ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் பதிவான காணொளி சமூகத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பாலத்தின் கட்டுமானத் தரம் குறித்து பலரும் பரிகாசம் செய்துவருகின்றனர்.
பாலத்தை அதிகாரபூர்வமாக திறக்க பல அதிகாரிகள் பாலத்தில் கூடினர். பாலத்தின் இருமுனைகளிலும் ஒரு நாடா இணைக்கப்பட்டிருந்தது. பெண் அதிகாரி ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து நாடா வெட்டியதுதான். உடனே பாலம் இரண்டாக இடிந்து விழுந்தது. நல்லவேளையாக பாலத்தில் இருந்த அனைவரும் அடித்து பிடித்துக்கொண்டு பாலத்திலிருந்து குதித்தனர். யாரும் ஆற்றில் விழவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.
மழைக்காலத்தின்போது ஆற்றை கடக்க உள்ளூர்வாசிகள் அதிக சிரமப்பட்டனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் அடிக்கடி இடிந்துவிழுந்தது. இதனால் முறையான பாலத்தை அமைக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். ஆனால் அதை முறையாகக்தான் கட்டவில்லை என்று இணையவாசிகள் கருத்துரைத்தனர்.