மாஸ்கோ: ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் லாயிங்கை நேற்று சந்தித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், மியன்மார் உடனான ஆக்ககரமான உறவுகளை மறுவுறுதிப்படுத்தினார்.
"தென்கிழக்காசியாவில் எங்களது நீண்டகால, நம்பகமான பங்காளியாக மியன்மார் உள்ளது. எங்களுக்கு இடையேயான உறவுகள் ஆக்ககரமான முறையில் வளர்ந்து வருகின்றன," என்று புட்டின் கூறினார்.
உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்காகவும் மியன்மாரில் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்காகவும் இரு நாடுகளும் அரசதந்திர ரீதியில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மியன்மார் ராணுவத் தலைவரின் ரஷ்யப் பயணம் இடம்பெற்றுள்ளது.

