வெலிங்டன்: நியூசிலாந்தின் தென்தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதி யில் படகு கவிழ்ந்ததில்
அதில் பயணம் செய்து
கொண்டிருந்தவர்களில் ஐந்து பேர் கடலில் மூழ்கி மாண்டனர்.
இந்தச் சம்பவம் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணி அளவில் நிகழ்ந்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது படகில் 11 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடலில் விழுந்தவர்களைத் தேடி, மீட்கும் பணி ஏறத்தாழ ஏழு மணி நேரத்துக்கு நீடித்ததாக அறியப்
படுகிறது.
மாண்டோரின் சடலங்கள் படகிற்குள் இருந்ததாகவும் அவற்றை நியூசிலாந்துக் காவல்துறையின் முக்குளிப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆறு பேரை மீட்புப் பணி
யாளர்கள் காப்பாற்றினர்.
அவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். அத்துடன் கடல் அமைதி யாக இருந்ததாக நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
திமிங்கிலம் மீது படகு மோதிருக்கக்கூடும் என்றும் அதற்கான அறிகுறிகள் தென்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் சம்பவம் நிகழ்ந்த கடற்பகுதியில் இம்மாதம் திமிங்கிலங்கள் பொதுவாக இருக்காது என்பதால் இது ஆச்சரியமளிப்பதாக கைகோரா நகரின் மேயர் மிரேக் மெக்கல் தெரிவித்தார்.
மாண்டோரின் குடும்பங்களுக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபங்
களைத் தெரிவித்துக்கொண்டார்.