இந்தோனீசியா, பாப்புவா நியூ கினியில் நிலநடுக்கம்; குறைந்தது மூவர் மாண்டனர்

இந்தோனீசியா, பாப்புவா நியூ கினியில் நிலநடுக்கம்; குறைந்தது மூவர் மாண்டனர்

1 mins read
f55b1d1b-b37e-4043-a23f-af52e2641bf3
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனீசிய மக்கள் சாலைகளில் தங்கினர். படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: பாப்­புவா நியூ கினி­யில் நேற்று காலை ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­தில் குறைந்­தது மூவர் மாண்­டு­விட்­ட­னர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

அதன் மேற்­குப் பகு­தி­யில்

7.6 ரிக்­டர் அள­வில் பதி­வான இந்த நில­ந­டுக்­கத்­தின்­போது கட்­ட­டங்­கள் சேத­ம­டைந்­தன. நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இத­னைத் தொடர்ந்து விடுக்­கப்­பட்ட சுனாமி எச்­ச­ரிக்கை, பின்­னர் மீட்­டுக் கொள்­ளப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் உள்­ள­வர்­களை மீட்­கும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே, இந்­தோ­னீ­சி­யா­வில் 6.1 ரிக்­டர் அள­வில் சக்­தி­வாய்ந்த நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து மெண்­டாவி தீவில் இருந்து கிட்­டத்­தட்ட 200க்கும் மேற்­பட்­ட­வர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

மேற்கு சும்­த­ரா­வின் மெண்­டாவி தீவில் 27 கி.மீட்­டர் ஆழத்­தில் நில­நடுக்­கம் மையம் கொண்­டி­ருந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். அதைத் தொடர்ந்து 5.3 ரிக்­டர் அள­வில் 2­வது நில­ந­டுக்­க­மும் ஏற்­பட்­டது.

நில­ந­டுக்­கம் வலு­வா­ன­தாக இருந்­தது என்­றும் மரத்­தி­னால் செய்­யப்­பட்ட தங்­க­ளது வீடு­கள் ஆட்­டம் கண்­ட­தா­க­வும் அப்­ப­கு­தி­வா­சி­கள் கூறி­னர்.

அப்­போது, ஒரு­வ­ருக்­குத் தலை­யில் காயம் ஏற்­பட்­டது. பீதி­ய­டைந்த மக்­கள் தெருக்­க­ளி­லும் முகாம்­களி­லும் தஞ்­ச­ம­டைந்­த­னர்.

அப்­ப­கு­தி­யில் இருந்த சில பள்ளிக்­கூ­டங்­களும் சுகா­தார மையங்­களும் லேசாக சேத­ம­டைந்­த­தாக பேரி­டர் மேலாண்மை குழு சொன்­னது.