உணவுப் பற்றாக்குறை; மன்னிப்பு கோரிய சீன அதிகாரிகள்

உணவுப் பற்றாக்குறை; மன்னிப்பு கோரிய சீன அதிகாரிகள்

1 mins read
dcecbf03-6c42-474c-acc9-eec47c7ddcac
-

பெய்­ஜிங்: சீனா­வின் ஸின்­ஜி­யாங் மாநிலத்தில் நில­வும் உணவு, மருந்­துப் பற்­றாக்­கு­றைக்கு அதி­கா­ரி­கள் மன்­னிப்­புக் கோரி­யுள்­ள­னர். கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக கிட்­டத்­தட்ட ஒரு மாத­கா­ல­மாக அப்­ப­குதி முடக்­கப்­பட்­டுள்­ளது.

ஸின்­ஜி­யாங் வட்­டா­ரத்­தின் யிலி பகு­தி­யில் நில­வும் பற்­றாக்­குறை, கடி­ன­மான நிபந்­த­னை­கள் கடந்த சில நாள்­க­ளாக சீன சமூக ஊட­கங்­களில் வலம் வந்­தன.

முடக்­க­நிலை உள்ள பகு­தி­களில் மருத்­துவ உதவி பெற­முடி­யாத நிலை உள்­ள­தா­க­வும் உணவு விநி­யோ­கத்­தில் சிக்­கல் உள்­ள­தையும் அப்­ப­கு­தி­யின் அதி­கா­ரி­கள் ஒப்­புக்­கொண்­ட­னர்.

இதனை உட­ன­டி­யாக சரி செய்ய உள்­ளூர் அர­சாங்­கம் முயற்­சி­களை எடுத்து வரு­வ­தா­க­வும் அம்­மா­நில ஆளு­நர் சொன்­னார்.

உய்­கர் இன மக்­கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னர் அதி­கம் வசிக்­கும் ஸின்­ஜி­யாங் மாநி­லத்­தில் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன.

யிலி பகு­தி­யில் கிட்­டத்­தட்ட 500,000 மக்­கள், சென்ற மாதம் 11ஆம் தேதி­யில் இருந்து முடக்­கப்­பட்­டுள்­ள­னர்.