பிரிட்டன் அரியணை வரிசையில் மாற்றம்

அரசியாரின் மறைவு, ஹேரி-மேகன் தம்பதியை மீண்டும் அரச குடும்பத்துடன் நல்ல உறவை வளர்க்க தூண்டும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

லண்­டன்: எலி­ச­பெத் அர­சி­யா­ருக்­கு பிறகு மூன்­றாம் சார்­ல்ஸ் அரி­யணை ஏறி­யுள்­ள­தைத் தொடர்ந்து, அடுத்த அர­ச­ரா­கக்­கூ­டிய வாரி­சு­களின் பட்­டி­ய­லும் மாறி­யுள்­ளது.

மூன்­றாம் சார்­ல்ஸுக்­குப் பிறகு, அரி­ய­ணைக்­கான முதல் இடத்­தில் இள­வ­ர­சர் வில்­லி­யம் உள்­ளார். மூன்­றாம் சார்­ல்­ஸுக்­கும் மறைந்த இள­வ­ரசி டயா­னா­விற்­கும் பிறந்த மூத்த மக­னான வில்­லி­யம் பிரிட்­ட­னின் புதிய இள­வ­ர­சரராகியுள்ளார்.

இவர்­க­ளின் மூத்த மக­னான ஒன்­பது வயது ஜார்ஜ் அரி­ய­ணைக்­கான இரண்­டா­மி­டத்­தில் உள்ளாா்.

வில்­லி­யம் தம்­ப­தி­யின் இரண்­டா­வது வாரி­சான ஏழு வயது மகள் சார்­லட் மூன்­றாம் இடத்­தி­லும் இவர்­க­ளின் நான்கு வயது கடைசி மகன் லூயி நான்­காம் இடத்­தி­லும் உள்­ள­னர்.

இள­வ­ர­சர் வில்­லி­யம்­மின் இளைய சகோ­த­ரர் ஹேரி ஐந்­தாம் இடத்­தி­லும் அவ­ருக்­கும் அவ­ரது மனைவி மேக­னுக்­கும் பிறந்த மூத்த பிள்­ளை­யான மூன்று வயது இள­வ­ர­சர் ஆர்க்கி ஆறா­வது இடத்­தி­லும் ஆர்க்­கி­யின் இளைய சகோ­த­ரி­யான ஒரு வயது லிலி­பெட் ஏழா­வது இடத்­தி­லும் உள்­ள­னர்.

ஆனால், நிதி ரீதி­யில் சுதந்­தி­ர­மாக செயல்­பட விரும்­பிய ஹேரி-மேகன் தம்­பதி அரச குடும்­பத்­தில் இருந்து இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் வில­கி­னர்.

இவர்­க­ளுக்கு அடுத்­தப்­ப­டி­யாக மறைந்த எலி­ச­பெத் அர­சி­யா­ரின் மூன்­றா­வது மக­னான 62 வயது ஆண்ட்ரூ எட்­டா­வது இடத்­தில் உள்­ளார். பாலி­யல் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளான இவர், 2019ல் அரச குடும்­பத்­தில் இருந்து வில­கி­னார்.

இதற்­கி­டையே, இரண்­டாம் எலி­ச­பெத் அர­சி­யா­ரின் மறைவு, ஹேரி­யை­யும் அவ­ரது மனைவி மேகனை­யும் அரச குடும்­பத்­து­டன் மீண்­டும் நல்ல உறவை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தூண்டக்கூடும் என்று கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

மறைந்த அர­சி­யா­ருக்கு அஞ்­சலி செலுத்­துவதற்காக மக்­கள் வைத்­தி­ருந்த மலர் வளை­யங்­க­ளைக் காண்­ப­தற்கு இள­வ­ர­சர் வில்­லி­ய­மும் சகோ­த­ரர் ஹேரி­யும் தங்­க­ளது மனை­வி­யு­டன் ஒன்­றாக சென்­றது பல­ரின் கவ­னத்­தை ஈர்த்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!