எலிசபெத் அரசியாரின் நல்லுடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்ட்டர் மாளிகைக்கு வரும் புதன்கிழமை கொண்டுவரப்படும். புதன்கிழமையிலிருந்து அடுத்த திங்கட்கிழமை வரை அரசியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் மாளிக்கைக்கு செல்லலாம். அரசியாரின் இறுதிச் சடங்கு இம்மாதம் 19 அன்று நடைபெறும்.
அரசியாருக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வரிசையில் பல மணிநேரம் வரை காத்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டது. இதனையொட்டி மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்படும்.
வெஸ்ட்மினிஸ்ட்டர் மாளிகையில் கடைசியாக எலிசபெத் அரசியாரின் தாயாரின் நல்லுடல் வைக்கப்பட்டது. அப்போது 200,000க்கும் அதிகமானோர் மாளிகைக்கு வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவர் 2002ல் காலமானார்.

