உக்ரேன் போர்: நிதி வழங்க வழிதேடும் பண நிதியம்

உக்ரேன் போர்: நிதி வழங்க வழிதேடும் பண நிதியம்

2 mins read
ee508228-4e6b-401d-88a2-0b98d1eb4220
-

வாஷிங்­டன்: உக்­ரேன்-ரஷ்யா போர் கார­ண­மாக உணவு விலை­யு­யர்­வால் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­களுக்கு அவ­சர நிதி வழங்­கு­வ­தற்­கான வழி­களை அனைத்­து­ல­கப் பண நிதி­யம் தேடி வரு­கிறது. நேற்று நடை­பெ­ற­வி­ருந்த நிர்­வா­கக் குழுச் சந்­திப்­பில் இது­கு­றித்து கலந்­தா­லோ­சிக்­கப்­பட இருந்­த­தாக இந்த விவ­கா­ரம் பற்றி அறிந்த சிலர் கூறி­னர். வழக்­க­மான நிதித் திட்­டத்­தின்­போது விதிக்­கப்­படும் நிபந்­த­னை­களை விதிக்­கா­மல், உக்­ரே­னுக்கு உதவ நிதி­யத்தை இந்த நட­வடிக்கை அனு­ம­திக்­கும்.

அண்­மைய மாதங்­க­ளாக நிதி­யத்­தின் ஊழி­யர்­கள் வகுத்­துள்ள இந்­தத் திட்­டத்தை ஆத­ரிப்­ப­தற்­கான முறை­யான வாக்­கெ­டுப்பு, அக்­டோ­ப­ரில் நடை­பெ­றும் நிதி­யத்­தின் வரு­டாந்­திர சந்­திப்­பு­க­ளுக்கு முன்பு நடத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"இந்­தத் திட்­டம் எளி­மை­யா­னது, ஆனால் இது பல நாடு­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும்," என்று பெ­யர் குறிப்­பிட விரும்­பாத ஒரு­வர் கூறி­னார்.

உக்­ரேன்-ரஷ்யா போர் தொடங்­கி­ய­தில் இருந்து உல­கம் முழு­வ­தும் உணவு விலை­கள் ஏற்­றம் கண்­டு உள்­ளன. வளர்ச்சி அடைந்த நாடு­களில் இவ்­வாண்டு பண­வீக்­கம் 6.6 விழுக்­காட்­டை­யும் வளர்ந்­து­வரும் நாடு­களில் அது 9.5 விழுக்­காட்­டை­யும் எட்­டும் என்று கடந்த ஜூலை­யில் நிதி­யம் முன்­னு­ரைத்து இருந்­தது.

உண­வுப் பற்­றாக்­கு­றை­யால் அவ­தி­யு­றும் பல ஆப்­பி­ரிக்க நாடு­கள், தங்­க­ளுக்கு கூடு­தல் நிதி வழங்கக் கோரி வந்­துள்­ளன. எனி­னும், கூடுதல் நிதியை எத்­தனை நாடு­கள் நாடும் என்­பது பற்றி தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

உக்ரேனிய அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக பண நிதியம் கடந்த வாரம் கூறியது. எனினும், தங்களுக்கு முழுமையான நிதித் தொகுப்புத் திட்டம் தேவை என உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.