மின் விநியோகக் கட்டமைப்பின்மீது ரஷ்யா தாக்குதல்

மின் விநியோகக் கட்டமைப்பின்மீது ரஷ்யா தாக்குதல்

1 mins read
74a5023b-e9ad-48aa-afcb-ed1e1f5e87a6
-

கியவ்: கடந்த வார­யி­று­தி­யில் ரஷ்­யப் படை­க­ளுக்கு எதி­ராக உக்­ரே­னி­யப் படை­கள் நடத்­திய தாக்­கு­தல்­க­ளுக்­குப் பழி­தீர்க்­கும் வித­மாக, மின் விநி­யோ­கக் கட்­ட­மைப்­பின் மீது ரஷ்யா தாக்­கு­தல் நடத்­தி­ய­தற்கு உக்­ரேன் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

ரஷ்­யா­வின் தாக்­கு­தல்­க­ளுக்கு நீர் வச­தி­களும் கார்­கிவ் நக­ரில் உள்ள மின்­சார நிலை­யங்­களும் இலக்­கா­கின. இத­னால் பல இடங்­களில் மின்­தடை ஏற்­பட்­டது.

ஆனால், குடி­மக்­க­ளைக் குறி­வைத்து தன் படை­கள் வேண்­டு­மென்றே தாக்­கு­தல்­களை நடத்­த­வில்லை என்று ரஷ்யா கூறி­யது.

இதற்­கி­டையே, இந்த மாதத் தொடக்­கத்­தில் இருந்து உக்­ரே­னிய ஆயு­தப் படை­கள் 3,000க்கும் அதி­க­மான சதுர கிலோ­மீட்­டர் நிலப்­பரப்­பைக் கைப்­பற்றி இருப்­ப­தாக உக்­ரே­னின் தலை­மைத் தள­பதி ஜென­ரல் வேலரி ஸலுஸ்யி கூறி­னார்.