லண்டன்: மறைந்த எலிசபெத் அரசியாருக்கு நேற்று அஞ்சலி செலுத்திய அவருடைய பேரன் இளவரசர் ஹேரி, தம் பாட்டி தமக்கு திசைகாட்டியாக இருந்ததாகச் சொன்னார். அரசியாருக்கு தாம் எப்போதும் நன்றியுடன் இருப்பதாகக் கூறிய இளவரசர் ஹேரி, 37, அரசியார் தம் வாழ்நாள் முழுவதும் கண்ணியத்துடனும் கருணையுடனும் இருந்ததை நினைவுகூர்ந்தார்.
அரச குடும்பத்தைவிட்டு வெளியேறி 2020ல் தம் மனைவி மேகனுடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இளவரசர் ஹேரி, "உலகம் முழுவதும் அவர் (அரசியார்) போற்றப்பட்டு ஏராளமானோரின் மதிப்பையும் பெற்றார்," என்றார்.

