போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று ஏழாக உயர்ந்தது.
நிலநடுக்கத்தால் கட்டடங்களுக்கும் சாலைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் காவல்துறை ஆணையர் டேவிட் மேனிங் கூறினார். பாப்புவா நியூ கினியின் பிரதான நகர்களை இணைக்கும் உயிர்நாடியான ஹைலண்ட்ஸ் ஹைவேயின் சில பகுதிகள் சேதம் அடைந்து உள்ளன.

