எடின்பர்க்: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் உயிர்நாடி என அரசர் மூன்றாம் சார்ல்ஸ் வர்ணித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அவர், மறைந்த தம் தாயார் எலிசபெத் இரண்டாம் அரசியாரின் முன்னுதாரணத்தை தாம் பின்பற்றப் போவதாக உறுதி அளித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக தம் மனைவி கமிலாவுடன் இளவரசர் சார்ல்ஸ் நேற்று லண்டன் சென்றார்.
அதையடுத்து, தம் உடன்பிறப்புகளுடன் சேர்ந்து அரசியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகருக்குச் சென்றார் அவர்.

