சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும்: சிலாங்கூர் மன்னர்

சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும்: சிலாங்கூர் மன்னர்

1 mins read
d8ac415c-79db-49a8-9a4b-ad477e74ebe2
-

கோலா­லம்­பூர்: சட்ட திட்­டங்­க­ளை­யும் நீதித்­து­றை­யின் சுதந்­தி­ரத்­தை­யும் மதித்து நடக்­கும்­படி சிலாங்­கூர் மன்­னர் சுல்­தான் ஷரா­ஃபுதீன் இத்­ரீஸ் ஷா, மலே­சி­யர்­க­ளுக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அக­மது ஷாவுக்கு தமது ஆத­ர­வை­யும் அவர் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

குறிப்­பிட்ட சில தரப்­பி­னருக்குப் பலன் தரு­வ­தற்­காக மட்டும் அரச மன்­னிப்பு வழங்­கும் அதி­கா­ரத்­தைப் பயன்­படுத்­தக்­கூ­டாது என்று மாமன்­னர் முன்­ன­தாக கூறி­யிருந்­தார்.

"நாட்­டின் நல­னுக்­கா­க­வும் வளத்­துக்­கா­க­வும் நீதித்­து­றை­யைத் தற்­காத்து அதன் சுதந்­திரத்தை உறு­தி­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க அனைத்து தரப்­பி­ன­ரை­யும் நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று சுல்­தான் ஷரா­ஃபு­தீன் கையெ­ழுத்­திட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறை­வா­சம் சென்­றுள்ள முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக்­கிற்கு அரச மன்­னிப்பு வழங்­கக் கோரி அம்னோ தலை­வர்­களும் உறுப்­பினர்­களும் வேண்­டு­கோள் விடுத்துள்­ள­தைத் தொடர்ந்து மாமன்­னர், சிலாங்­கூர் மன்­ன­ரின் அறிக்­கை­கள் வெளி­வந்­துள்­ளன.