நஜிப்பின் விசாரணை ஒத்திவைப்பு

நஜிப்பின் விசாரணை ஒத்திவைப்பு

1 mins read
1f96da7c-91eb-4e87-9be8-4257afecd5fb
-

கோலா­லம்­பூர்: மலே­சிய முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக்­கிற்கு மருத்­துவ உதவி தேவைப்­பட்­ட­தால், நேற்று நடை­பெ­ற­வி­ருந்த அவ­ரது 1எம்­டிபி ஊழல் வழக்கு விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

நில­வ­ரம் குறித்து சிறைச்­சா­லைத் துறை அதி­காரி தமக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தைத் தொடர்ந்து, விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தாக அர­சாங்க தரப்பு மூத்த வழக்­க­றி­ஞர் கோபால் ஸ்ரீராம் கூறி­னார்.

"குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு ரத்த அழுத்­தத்­துக்­கான மருந்து மாற்­றப்­பட்­டது. அது அவ­ருக்­குப் பக்­க­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது," என்று ஸ்ரீராம் குறிப்­பிட்­டார்.

தம் தந்­தை­யின் உடல்­நிலை குறித்து தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார் நஜிப்­பின் மகள் நூர்­யானா நஜ்வா நஜிப்.

"மருந்து மாற்­றப்­பட்­ட­தால் அப்பா­வின் ரத்த அழுத்­தம் ஆபத்­தான அள­வுக்கு உயர்ந்­தது தெரி­ய­வந்­துள்­ளது," என்­றார் அவர்.

வழக்கு விசா­ரணை இன்று தொட­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.