நஜிப்பின் ஃஎம்டிபி வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

நஜிப்பின் ஃஎம்டிபி வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு

1 mins read
fa120c6c-d1d4-4da6-a7dd-c336bcc5e005
முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

கோலாலம்பூர்: முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் ஊழல் வழக்கு புதன்கிழமைக்கு (14 செப்டம்பர்) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமையன்று (12 செப்டம்பர்) திரு நஜிப் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைக்காக 'ஹொஸ்பிட்டல் கோலாலம்பூர்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மலேசியாவின் தேசிய இதயக் கழகத்திற்கு அனுப்பப்படலாம் என்று என்று அவரின் வழக்கறிஞர் திரு முகம்மது ஷஃபீ அப்துல்லா தெரிவித்துள்ளார்.

வரும் நாள்களில் திரு நஜிப் மேலும் சில சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்வார் என்றும் திரு நஜிப்பின் வழக்கறிஞர் திரு முகம்மது ஷஃபீ கூறினார்.

மருத்துவமனையில் திரு நஜிப்பைப் பார்க்கத் தனக்கு அனுமதி வழங்கப்படாததாலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்து அவர் தன்னிடம் விவரிக்கமுடியாததாலும் செவ்வாய்க்கிழயமைன்று (13 செப்டம்பர்) நடைபெறவிருந்த நீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்கத் திரு முகம்மது ஷஃபீ கேட்டுக்கொண்டுள்ளார்.

துணை அரசு வழக்கறிஞரான முகம்மது முஸ்தஃபா பி குன்யாலம் அதறக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா வழக்கை புதன்கிழமை (14 செப்டம்பர்) பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.