குறைந்தபட்ச வருமானம்; இந்தோனீசியா மறுஆய்வு

குறைந்தபட்ச வருமானம்; இந்தோனீசியா மறுஆய்வு

1 mins read
5171867f-f950-43bb-8e11-8cbf913cfe4f
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சிய ஊழி­யர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச வரு­மா­னம் குறித்­தும் தொழில் தொடர்­பான மற்ற விதி­மு­றை­கள் குறித்­தும் மறு­ஆய்வு செய்­யப்­படும் என்று அந்­நாட்டு அர­சாங்­கம் அறி­வித்­

துள்­ளது.

எரி­பொ­ருள் விலையை

இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ 30 விழுக்­காடு அதி­

க­ரித்­ததை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரி­வித்து அண்­மை­யில் இந்­தோ­னீ­சி­யா­வில் தொழிற்­சங்­கங்­கள் நாடு தழு­விய ஆர்ப்­பாட்­டங்­

க­ளுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் நீண்­ட­கா­ல­மாக அதி­க­ரிக்­கப்­ப­டா­மல் இருக்­கும் நிலை­யில் விலை அதி

­க­ரிப்பை ஏற்க முடி­யாது என்று போர்க்­கொடி உயர்த்­தப்­பட்­டது.

எரி­பொ­ருள் விலை அதி­க­ரிப்பு பண­வீக்­கத்தை மோச­மாக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

அதி­க­ரிக்­கும் உணவு விலை­யால் இந்­தோ­னீ­சி­யா­வில் 2015ஆம் ஆண்­டுக்­குப் பிறகு பண­வீக்­கம் புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

மத்­திய ஜகார்த்­தா­வில் உள்ள அதி­பர் மாளி­கைக்கு வெளியே ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட ஊழி­யர்­களை அதி­பர் அலு­வ­ல­கத் தலை­வர் திரு ஜெரு புடி ஹார்­டோனோ சந்­தித்து, அவர்­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக

இந்­தோ­னீ­சிய அதி­பர் மாளிகை அறிக்கை வெளி­யிட்­டது.