இஸ்மாயில் சப்ரி: வெள்ளம் முன்னதாகவே ஏற்படக்கூடும்

இஸ்மாயில் சப்ரி: வெள்ளம் முன்னதாகவே ஏற்படக்கூடும்

1 mins read
399ae025-f118-4952-b4c2-d1e1e1a13145
-

புத்ராஜெயா: மலே­சி­யா­வில் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தற்கு முன்பே

வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். எதிர்­வ­ரும் வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழை­யால் ஆறு மாநி­லங்­களில் கன­மழை பெய்­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்­ளம் ஏற்­ப­டு­வ­தற்கு முன் அதை எதிர்­கொள்ள தகுந்த நட­

வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று திரு இஸ்­மா­யில் சப்ரி அழைப்பு விடுத்­துள்­ளார்.

பேரி­டர் நிர்­வா­கக் குழுக்­கள் தயார்­நி­லை­யில் வைக்­கப்­

பட்­டுள்­ளன.

வெள்­ளத்தை எதிர்­கொள்ள மேற்­கொள்­ளப்­பட இருக்­கும்

நட­வ­டிக்­கை­க­ளுக்­காக 8 மில்­லி­யன் ரிங்­கிட் ($2.48 மில்­லி­யன்) ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மல்­லாது, பல்­வேறு மாவட்­டங்­களில் மீட்­புப் பணி­க­ளுக்­காக 320 ஃபைபர்­கி­ளாஸ் பட­கு­களை வழங்க 4.8 மில்­லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இது ஒரு­பு­றம் இருக்க, 6,010 துயர்­து­டைப்பு மையங்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. வரும் நவம்­பர் மாதத்­தி­லி­ருந்து டிசம்­பர் மாதம் வரை கிளந்­தான், திரங்­கானு, பாஹாங் ஆகிய மாநி­லங்­களில் கன­மழை பெய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

டிசம்­பர் மாதத்­தி­லி­ருந்து ஜன­வரி மாதம் வரை ஜோகூர், சாபா, சர­வாக் ஆகிய மாநி­லங்­களில் கன­மழை பெய்­யும் என்று

முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.