கைரி: நஜிப்பின் மருந்து மாற்றப்படவில்லை

கைரி: நஜிப்பின் மருந்து மாற்றப்படவில்லை

1 mins read
6c8d6eac-9aa6-4ebd-8de2-76f67629b384
-
Google News Preferred Icon

கோலாலம்பூர்: சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் உடல்நலம் குன்றியதால் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக 1எம்டிபி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தத்துக்காக நஜிப் உட்கொள்ளும் மருந்து மாற்றப்பட்டுள்ளது எனக் கூறப்படுவது தவறு என்றார் மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன்.

நஜிப் முன்பு தனியார் மருத்துவமனையில் வாங்கிய அதே மருந்துதான் அவருக்குக் கொடுக்கப்படுவதாக திரு கைரி தெரிவித்தார்.

ஆனால் அந்த மருந்து வேறு நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதால் அதற்கு வேறொரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மருந்தின் தரத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்று திரு கைரி கூறினார்.

இதற்கிடையே, மலேசியாவில் உள்ள தேசிய இதயக் கழகத்தில் நஜிப்புக்கு சிகிச்சை வழங்கப்படும் என்று நிலவும் பேச்சுக்கு திரு கைரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

எல்லா கைதிகளுக்கும் சட்டத்துக்கு உட்பட்டு அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்றார் அவர்.