மலேசியாவில் சில குற்றங்களுக்கு இனி மரண தண்டனை இல்லை

மலேசியாவில் சில குற்றங்களுக்கு இனி மரண தண்டனை இல்லை

2 mins read
4d5f4236-7ad0-47d1-8600-07276b2df3e6
-

புத்­ர­ஜெயா: மலே­சி­யா­வில் சில குற்­றங்­க­ளுக்கு மரண தண்­ட­னைக்­குப் பதி­லாக வேறு தண்­ட­னை­களை விதிக்க அந்­நாட்டு அர­சாங்­கம் முடி­வெ­டுத்­துள்­ளது. மலே­சி­யா­வின் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாஃபார் நேற்று இதைத் தெரி­வித்­தார்.

இம்­மா­தம் ஆறாம் தேதி, நேற்று முன்­தி­னம் ஆகிய இரு நாள்­களில் நடை­பெற்ற சந்­திப்­பு­க­ளுக்­குப் பிறகு இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக அறிக்கை ஒன்­றில் டாக்­டர் வான் ஜுனாய்டி குறிப்­பிட்­டார்.

அவர் தலைமை வகித்த பணிக்­குழு அந்த சந்­திப்­பு­களை நடத்­தி­யது. 'கட்­டாய மரண தண்­ட­னைக்­குப் பதி­லாக மாற்று தண்­ட­னை­கள் செயல்­பாட்­டுப் பணிக்­குழு' என்று அந்­தப் பணிக்­குழு அழைக்­கப்­ப­டு­கிறது.

கட்டாய மரண தன்டனை விதிக்கப்பட்டுவரும் 11 குற்­றங்­களுக்கு மாற்று தண்­ட­னை­களை விதிக்க அர­சாங்­கம் ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. அபா­ய­க­ர­மான போதைப்­பொ­ருள் சட்­டத்­தின் '39பி' பிரிவுக்குக்கீழ் வரும் ஒரு குற்­றம் அவற்­றில் அடங்­கும்.

அபா­ய­க­ர­மான போதைப்­பொ­ருள் சட்­டத்­தின் '39பி' பிரிவு, போதைப்­பொ­ருள் கடத்­த­லுக்­குத் தொடர்­புடை­யது.

1,337 கைதி­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றா­மல் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் டாக்­டர் வான் ஜுனாய்டி தெரி­வித்­தார்.

மரண தண்­டனை மாற்­றம் குறித்த முடிவு அமைச்­ச­ர­வை­யி­டம் சமர்ப்­பிக்­கப்­படும். அதற்கு அனு­மதி வழங்­கக் கோரி அமைச்­ச­ர­வைச் சந்­திப்பு நடத்­தப்­படும்.

இந்த சட்ட மசோ­தா­வின் முதல் வாசிப்பு அடுத்த மாதம் நான்­காம் தேதியன்றும் இரண்­டாம் வாசிப்பு வரும் நவம்­பர் மாதம் 22ஆம் தேதி­யன்­றும் இடம்­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கட்­டாய மரண தண்­ட­னையை நீக்கி மாற்று தண்­ட­னை­களை விதிக்க மலேசிய அர­சாங்­கம் ஒப்புக்­கொண்­ட­தாக டாக்­டர் வான் ஜுனாய்டி இவ்­வாண்டு ஜூன் மாதம் கூறி­யி­ருந்­தார். மாற்று தண்­ட­னை­களை ஆரா­யும் அறிக்கை அம்மாதம் எட்­டாம் தேதி­யன்று நடை­பெற்ற அமைச்­ச­ர­வைச் சந்­திப்­பில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பிறகு முடிவு எடுக்­கப்­பட்­டது. கொலை, போதைப்­பொ­ருள் கடத்­தல், பயங்­க­ர­வா­தம், ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­பது உள்­ளிட்ட குற்­றங்­க­ளுக்கு மலேசியாவில் மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.