மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி விளக்கம்

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி விளக்கம்

2 mins read
ea2751a9-e744-49d9-a313-7d6c61d47db4
-

ஜார்ஜ் டவுன்: செப்­டம்­பர் மாதம் வந்­து­விட்­ட­போ­தும் இவ்­வாண்டே பொதுத் தேர்­தலை நடத்த இன்னமும் கால அவ­கா­சம் இருப்­ப­தாக மலே­சியப் பிர­த­மர் இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் கூறி­யுள்­ளார். ஆனால், அது அம்னோ கட்­சி­யின் ஆக உய­ரிய பத­வி­யில் இருக்­கும் ஐந்து தலை­வர்­க­ளைப் பொறுத்தே இருக்­கும் என்று திரு இஸ்­மா­யில் குறிப்­பிட்­டார்.

"ஒவ்­வொரு முடி­வை­யும் அம்­னோ­வின் ஆக உய­ரிய ஐந்து தலை­வர்­கள் எடுப்­பர்," என்று அவர் சொன்­னார். பிரதமர் இஸ்மாயில், கட்­சி­யின் தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி, இணைத் தலை­வர் முகம்­மது ஹசான், துணைத் தலை­வர்­களான முகம்­மது காலெட் நோர்­டின், மாஹ்ட்­ஸீர் காலிட் ஆகி­யோர் அந்த ஐவர். திரு இஸ்மாயிலும் அம்னோவின் துணைத் தலைவர்களில் ஒருவர்.

அடுத்த மாதம் ஏழாம் தேதி­யன்று 2023 நிதி­யாண்­டுக்­கான மலே­சி­யா­வின் வர­வு­செ­ல­வுத் திட்டம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. பொதுத் தேர்­தல் அதற்கு முன்பு நடத்­தப்­ப­டுமா அல்­லது பின்னர் நடத்­தப்­ப­டுமா என்று திரு இஸ்­மாயி­லி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்கு அவர், "சந்­திப்பு அதற்கு முன்­னரே நடத்­தப்­ப­ட­லாம்," என்று பதிலளித்தார்.

ஆண்­டி­று­தி­யில் பொழி­யும் பருவ­ம­ழை­யால் மலே­சி­யா­வின் கிழக்­குக் கடற்­க­ரைப் பகு­தி­கள் பொது­வாக வெள்­ளத்­தால் பாதிக்­கப்­படும். அத­னால் இவ்­வாண்டு இறு­தி­யில் பொதுத் தேர்­தல் நடத்­தப்­ப­டாது என்று பொது­வா­கக் கருதப்­ப­டு­கிறது.

வரும் டிசம்­பர் மாதம் ஒன்­ப­தாம் தேதி­யி­லி­ருந்து 31ஆம் தேதி­வரை பள்ளி விடு­முறை நாள்­க­ளாக இருக்கும். வர­வு­செ­ல­வுத் திட்­டத்தை யார் அறி­விப்­பார் என்­பது குறித்து திரு இஸ்­மா­யில் தக­வல் ஏதும் வெளியி­ட­வில்லை.

"அக்­டோ­பர் ஏழாம் தேதி­வ­ரை காத்­தி­ருங்­கள்," என்றே அவர் சொன்­னார்.

'பொதுத் தேர்தல் தேதி குறித்து அம்னோவின் ஆக உயரிய தலைவர்கள் கலந்து பேசுவர்'