காற்பந்துத் துளிகள்

காற்பந்துத் துளிகள்

1 mins read
1aa6c93e-f3b8-470a-94b6-02dd096188b4
-

அசத்தியது ஸ்போர்ட்டிங்

லிஸ்பன்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் 'டி' பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்தின் டொட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 2-0 என்று வென்று தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது போர்ச்சுகலின் ஸ்போர்டிங் சிபி (படம்). இப்பருவத்தில் மிகச் சிறப்பாக விளையாடிவந்த ஸ்பர்சுக்கு இது ஒரு பின்னடைவு.

மீண்டும் பயர்னிடம் தோல்வி

மியூனிக்: 'சி' பிரிவில் ஸ்பெயினின் பார்சிலோனாவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் (படம்). பார்சிலோனாவுக்கு எதிாரான நான்கு ஆட்டங்களில் 16 கோல்களைப் போட்டுள்ளது பயர்ன்.

மருத்துவமனையில் நூர் அலி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரிமியர் லீக் குழுவான கேலாங் இன்டர்நேஷனலின் பயிற்றுவிப்பாளர் நூர் அலி (படம்) சாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 47 வயது நூர் அலிக்கு இதயப் படபடப்பு பிரச்சினை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.