அரசியலில் ஜோக்கோவி நீடிக்க வாய்ப்பு

அரசியலில் ஜோக்கோவி நீடிக்க வாய்ப்பு

1 mins read
2434cbb7-f4e5-4600-ba34-1e66a74da388
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யப் அதி­ப­ரான ஜோக்­கோவி என்­ற­ழைக்­கப்­படும் ஜோக்கோ விடோடோ 2024ஆம் ஆண்டு அதி­பர் தேர்­த­லில் துணை அதி­பர் பொறுப்­பிற்­குப் போட்­டி­யி­டக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. துணை அதி­பர் பத­விக்­குப் போட்­டி­யிட திரு ஜோக்­கோவி நிய­மிக்­கப்­பட்­டால் அது சாத்­தி­ய­மா­க­லாம்.

திரு ஜோக்­கோ­வியின் கட்­சி­யான 'பிடிஐ-பி' எனும் இந்­தோ­னீ­சிய ஜன­நா­ய­கப் போராட்­டக் கட்­சி­யின் மூத்த அதி­காரி திரு பம்­பாங் வூர்­யான்டோ இவ்­வாறு கூறி­ய­தாக இந்­தோ­னீ­சி­யா­வின் கொம்­பாஸ் எனும் ஊட­கம் தெரி­வித்­தது. இரண்டு தவ­ணைக் காலம் அதி­ப­ராக இருக்­கும் ஜோக்­கோ­வி­யால் இனி அப்­ப­த­விக்­கா­கப் போட்­டி­யிட முடி­யாது.