லண்டன்: பிரிட்டனின் எலிசபெத் அரசியாரின் நல்லுடல் ஊர்வலத்தில் அரசராகப் பதவியேற்றிருக்கும் மூன்றாம் சார்ல்சின் இரு புதல்வர்களும் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியமும் ஹேரியும் அரசியாரின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்குப் பின்னாலேயே இணைந்து நடந்து சென்றனர்.
இருவரும் மூன்றாம் எலிசபெத் அரசியாரின் மகனான அரசர் சார்ல்சுடன் இணைந்து பக்கிங்ஹம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கிற்கு நடந்து சென்றனர். அரசர் சார்ல்சின் உடன்பிறப்புகளான இளவரசி ஆன், இளவரசர்கள் ஆண்ட்ரூ, எட்வர்ட் ஆகியோரும் ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

