பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, எட்டு பேர் மரணம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, எட்டு பேர் மரணம்

1 mins read
5ed21c95-2418-4fbd-9218-1ca63c6c2e87
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒருவர். படம்: ஏஎஃப்பி -

பெஷா­வர்: பாகிஸ்­தா­னில் நிகழ்ந்த குண்டுவெடிப்­பில் முன்­னாள் அர­சாங்க சார்பு துணை ராணு­வத் தலை­வர் உட்பட எட்டு பேர் கொல்­லப்­பட்­டனர். இந்­தத் தாக்­கு­த­லுக்கு பாகிஸ்­தா­னில் இயங்­கும் தாலி­பான் அமைப்பு பொறுப்­பேற்றுள்ளது.

ஸ்வாட் பள்­ளத்­தாக்­கில் உள்ள கபால் நக­ரில் நேற்று முன்­தினம் இர­வு தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டது. 2007, 2009 ஆகிய ஆண்­டு­க­ளுக்கு இடைப்­பட்ட காலத்­தில் ஸ்வாட் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­யின் பெரும்­பா­லான இடங்­கள் தாலி­பான் ஆட்­சி­யில் இருந்­தன.

பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கத் தங்­க­ளின் கிரா­மங்­க­ளைத் தற்­காத்­துக்கொள்­ளு­மாறு பழங்­கு­டி­யி­னக் கிளர்ச்­சி­யா­ளர் படை­களை இஸ்­லா­மா­பாத் ஊக்­கு­வித்து வந்­தது. அந்­தப் பழங்­கு­டி­யி­னப் படை­கள் அமை­திக் குழுக்­கள் என்று அழைக்­கப்­பட்டனர்.

அவற்­றின் போராட்­டம் அடக்­கப்­பட்­டது. அமை­திக் குழுக்­களில் பெரும்­பா­லா­னவை கலைக்­கப்­பட்டன.

அந்த அமை­திக் குழு­ ஒன்றின் முன்­னாள் தலை­வ­ரான இட்­ரீஸ் கான் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்த தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்­ட­தாக ஸ்வாட் வட்­டா­ரக் காவல்­துறை அதி­காரி ஸாஹிட் நவாஸ் மார்­வாட் கூறி­னார்.

சாலை­யோ­ரத்­தில் வைக்­கப்­பட்டி­ருந்த குண்டு இட்­ரீஸ் கானின் லாரி­யைத் தாக்கியதால் அவர் மாண்டார்.

இரண்டு காவல்­துறை அதி­காரி­கள், இரு தனி­யார் பாது­காப்பு அதி­கா­ரி­கள், சாதாரண ஊழியர்கள் மூவர் ஆகி­யோரும் மாண்­டதை மற்­றொரு காவல்­துறை அதி­காரி உறு­திப்­ப­டுத்­தி­னார்.