ஜோர்தானில் கட்டடம் இடிந்து விழுந்தது, ஐவர் பலி

ஜோர்தானில் கட்டடம் இடிந்து விழுந்தது, ஐவர் பலி

1 mins read
86bf0aac-7a28-48fa-84fc-9d240c8af5ff
தலைநகர் அம்மானின் ஜபால் எல்-வெய்ப்டே வட்டாரத்தில் சம்பவம் நிகழ்ந்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

அம்மான்: ஜோர்­தான் தலை­ந­கர் அம்மானில் நான்கு மாடி குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்று இடிந்து விழுந்­த­தில் குறைந்­தது ஐவர் மாண்­ட­னர். ஆகக் கடைசி நில­வரப்­படி 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர்.

குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஜோர்தானியப் பிரதமர் பிஷர் அல்கா-சாவ்னேயும் இதர அமைச்சர்கள் சிலரும் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.