கார் விபத்தில் சிக்கிய உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

கார் விபத்தில் சிக்கிய உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி

1 mins read
ca53585f-580e-4cbb-83c1-3a0bee0ba559
-
Google News Preferred Icon

ரஷ்ய- உக்ரேன் போரின்போது ரஷ்ய படைகள் கைப்பற்றி பின்பு அதனிடமிருந்து மீட்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி கார் விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டார்.

அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

உக்ரேன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் நாசமாகின. இந்த போர் மூலம் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரேன் மீண்டும் மீட்டுள்ளது.

இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரேன் வடக்கு மாநிலத்தில் உள்ள இசியம் நகருக்கு அதிபர் ஸெலன்ஸ்கி சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார்.

அதன் பிறகு அவர் கியவ் நகருக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்ததும் ஸெலன்ஸ்கியுடன் சென்றிருந்த மருத்துவர்கள் ஸெலன்ஸ்கிக்கும் அவரது கார் ஓட்டுனருக்கும் முதல் உதவி அளித்தனர்.