விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

1 mins read
e8eaa75e-4adb-4df6-ab62-cf44303f7af5
-
Google News Preferred Icon

ஓய்வுபெறவுள்ளார் ஃபெடரர்

ஸூரிச்: ஆண்கள் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் ஓய்வுபெறவுள்ளார். இன்ஸ்டகிராம் வாயிலாக ஃபெடரர் இதை நேற்று அறிவித்தார். சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 41 வயது ஃபெடரர் 20 கிராண்ட் ஸ்லாம் விருதுகளை வென்றுள்ளார். ரஃபாயெல் நடால், நோவாக் ஜோக்கோவிச் ஆகியோர் மட்டுமே அவரைவிட அதிகமான கிராண்ட் ஸ்லாம் விருதுகளை வென்றிருக்கின்றனர்.

வேட்டையாடும் ஹாலண்ட்

மான்செஸ்டர்: மிகவும் அபாரமான கோலை போட்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் சிட்டியை வெல்ல வைத்தார் நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் 'ஜி' பிரிவு ஆட்டத்தில் இவரின் முந்தைய குழுவான பொருசியா டோர்ட்மண்டுக்கு எதிராக 2-1 எனும் கோல் கணக்கில் சிட்டி வென்றது. ஹாலண்டின் கோல் வேட்டையில் வெற்றிநடைபோடுகிறது சிட்டி.

பிஎஸ்ஜியை மீட்ட மாவீரர்கள்

ஹைஃபா (இஸ்ரேல்): பிரான்சின்ஸ் பிஎஸ்ஜி குழுவிற்கு கிலியோன் இம்பாப்பே (படத்தில் இடது), லயனல் மெஸ்ஸி (படத்தில் வலது), நெய்மார் ஆகிய மூவரும் ஓர் ஆட்டத்தில் கோல் போட்டுள்ளனர். இஸ்ரேலின் மக்காபி ஹைஃபாவிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் 'ஹெச்' பிரிவு ஆட்டத்தில் மூவரும் கோல் போட்டனர். இறுதி கோல் எண்ணிக்கை 3-1.