தோக்கியோ: தனிநபர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜப்பான் அடுத்த மாதம் விலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, நாட்டிற்குள் தினமும் வரும் அதிகபட்ச பயணிகளுக்கான உச்சவரம்பும் அகற்றப்படவுள்ளது.
தற்போது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50,000 பயணிகள் மட்டுமே ஜப்பான் செல்லலாம்.
தடை விலக்கப்பட்ட பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து குறுகிய காலத்திற்கு ஜப்பானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு விசா தேவைப்படாது.
உலகளவில் சுற்றுப்பயணத் துறை மீண்டு வருகிறது. அதன் மூலம் பலனடைவது ஜப்பானின் இலக்கு என்று நிக்கெய் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

