கோலாம்பூர்: மலேசியாவில் இயங்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவு மூடப்படலாம் என்று சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டது. அப்பிரிவு அந்நாட்டில் பல ஆண்டுகளாக அகதிகளை நிர்வகித்து வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மலேசியாவில் வாழும் நூறாயிரம் கணக்கான அகதிகள் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
2020ஆம் ஆண்டு அகதிகளைப் பதிவுசெய்ய 'ட்ரிஸ்' எனும் முறை உருவாக்கப்பட்டது. அதைப் பயன்படுத்த இவ்வாண்டு ஜூலை மாதம் மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியது. 'ட்ரிஸ்' முறைக்குக்கீழ் அகதிகளுக்கு உள்ளூரிலேயே அடையாள அட்டை வழங்கப்பட்டால் ஐக்கிய நாட்டு நிறுவனம் வழங்கும் அடையாள அட்டைகள் தேவைப்படாது என்று மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹம்ஸா கூறினார்.

