இலங்கையில் சுற்றுப்பயணிகளை ஈர்க்க ஒரு புதிய கண்காணிப்பு கோபுரம் திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் நிதி உதவியுடன் இது கட்டப்பட்டுள்ளது.
நொடித்துப்போன இலங்கைக்கு சுற்றுப்பயணிகளை மீண்டும் ஈர்க்க இந்த கோபுரம் உதவும் என நம்பப்படுகிறது.
350 மீட்டர் உயரமான இந்த கோபுரம் இலங்கையில் ஆக உயரமான கட்டடம். தாமரை மலர் போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோபுரத்திலிருந்து கொழும்பை 360 டிகிரி கண்ணோட்டத்திலிருந்து பார்வையிடலாம். இதோடு இந்தியப் பெருங்கடலையும் தெளிவாக காணமுடியும்.
கோபுரத்தின் கட்டுமானப் பணி 2012ல் தொடங்கியது. கட்டுமானப் பணியில் பலமுறை தாமதம் ஏற்பட்டது. 113 மில்லியன் டாலர் செலவில் இது எழுப்பப்பட்டது. 2024க்குள் 1.1 பில்லியன் ரூபாய் இலாபத்தை இந்த கோபுரம் ஈட்டித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பின் சுற்றுப்பயணம், கேளிக்கை ஆகியவற்றின் மையமாக இந்த கோபுரம் திகழும் என கோபுரத்தின் அன்றாட நடவடிக்கைகளை ஏற்றுநடத்தும் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

