கவலையில் ஓட்டுநர்கள்

கவலையில் ஓட்டுநர்கள்

2 mins read
f8640ecd-0ef9-40be-8e8c-26eae1a4a5aa
-

ஜகார்த்தா: புகை­மூட்­ட­மாக இருக்­கக்­கூ­டிய இந்­தோ­னீ­சியத் தலை­நகர் ஜகார்த்­தா­வின் சாலை­களில் பய­ணி­களை ஏற்­றிச் செல்­வது பல­ன­ளிக்­குமா என்று கரு­து­கி­றார் ஓட்­டு­நர் முகம்­மது ரிட்­வான்.

இந்­தோ­னீ­சி­யா­வில் அண்­மை­யில் எரி­சக்தி விலை­கள் 30 விழுக்­காடு அதி­க­ரித்தன. அதைத் தொடர்ந்து ஆகப் பிர­ப­ல­மான வாடகை வாக­னச் செய­லி­க­ளுக்கு வேலை செய்­யும் நூற்­றுக்­க­ணக்­கான ஓட்­டு­நர்­கள் நாடு முழு­வ­தும் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர்.

"வாகன எரி­சக்­திக்­குப் போது­மான தொகை இருப்­பதை உறு­தி­செய்ய சில நாள்­களில் ஒரு வேளை­கூட சரி­யாக உணவு உட்­கொள்­ளா­மல் இருப்­பேன். எரி­சக்தி இல்­லா­விட்­டால் என்­னால் எப்­படி வேலை செய்­ய­மு­டி­யும்?" என்­றார் கோஜெக் நிறு­வ­னத்­து­டன் இணைந்து பணி­யாற்­றும் திரு ரிட்­வான். கோஜெக், சிங்­கப்­பூ­ரின் கிராப் ஆகிய இரண்­டும் ஆசி­யா­வின் ஆக மதிப்­பு­மிக்க புதி­தா­கத் தொடங்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள்.

விதி­மு­றை­கள் அதி­கம் இல்­லாத சூழ­லில் இத்­த­கைய ஓட்­டு­நர்­கள் செயல்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஓட்­டு­நர்­க­ளின் ஊதி­யத்­தில் பெரும்­பங்­கைத் தாங்­கள் பெற்­றுக்­கொண்டு நிறு­வ­னங்­கள் அவர்­களின் நிலை­யைத் தங்களுக்கு சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தாக விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

உக்­ரேன் போரால் உல­க­ள­வில் மோச­ம­டை­யும் பண­வீக்­கம், அதி­க­ரிக்­கும் எரி­சக்தி விலை­கள் ஆகி­ய­வற்­றைச் சமா­ளிக்க இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ எரி­சக்தி சலு­கை­க­ளைப் பெரிய அள­வில் குறைத்­தார். அதற்­குப் பிறகு அந்­நாட்­டின் ஆக மலி­வான எரி­சக்­தி­யான 'பெட்­ரா­லைட்'டின் விலை­கூட லிட்­ட­ருக்கு 7,650 ருப்­பி­யா­வி­லி­ருந்து (0.72 வெள்ளி) 10,000 ருப்­பி­யா­வா­கக் கூடி­யது.

அதி­க­ரித்­துள்ள செல­வைச் சமா­ளிக்க கோஜெக், கிராப் இரண்­டும் சிறி­த­ளவே பய­ணக் கட்­ட­ணங்­களை உயர்த்­தி­யாக சில ஓட்­டு­நர்­கள் தெரி­வித்­த­னர். அர­சாங்க விதி­முறை­க­ளுக்கு ஏற்­ற­வாறே தங்­க­ளின் பய­ணக் கட்­ட­ணங்­களை மாற்­றி­ய­தாக அவ்­விரு நிறு­வ­னங்­களும் ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறின. கட்­ட­ணம் எவ்­வ­ளவு உயர்த்­தப்­பட்­டது என்­பது குறித்து கோஜெக், கிராப் இரண்­டும் தக­வல் வெளி­யி­ட­வில்லை. எனி­னும், கட்­டண உயர்வு ஓட்­டு­நர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்­தி­செய்­ய­வில்லை என்று ஊழி­ய­ர­ணித் தலை­வர்­கள் கூறி­னர்.

தற்­போ­தைக்கு நூற்­றுக்­க­ணக்­கான ஓட்­டு­நர்­கள் மட்­டுமே ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்தோனீசியாவில் எரிசக்தி விலை உயர்வால் எழுந்துள்ள சவால்கள்