ஜகார்த்தா: உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான அல்ஃபபெட் நிறுவனத்தின் கூகல் இணையத்தளத்தின் மீது இந்தோனீசியா விசாரணை நடத்துகிறது. 'கூகல் பிளே' தளத்தில் செயலிகளை வாங்க தனது கட்டண முறையைப் பயன்படுத்துமாறு கூகல் வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி வருவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை கூகல் மேற்கொண்டு வருவதாக இந்தோனீசியா கூறுகிறது. அது தனது ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகச் சந்தேகிக்கப்படுகிறதென அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர். சுமார் 270 மில்லியன் மக்கள் உள்ள இந்தோனீசியாவில் 'கூகல் பிளே'தான் ஆகப் பெரிய செயலி விற்பனைத் தளம்.
இந்த விவகாரத்தின் தொடர்பில் கூகல் பல நாடுகளில் சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.

