காற்பந்துத் துளிகள்

காற்பந்துத் துளிகள்

1 mins read
41001d19-f5a1-47c6-89da-af111181339b
-

ஆகஸ்ட் மாதத்தின் ஆகச் சிறந்த வீரர் எர்லிங் ஹாலண்ட்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் சென்ற மாதத்தின் ஆகச் சிறந்த வீரராக மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பருவத்தில் சிட்டியில் சேர்ந்ததிலிருந்து அபாரமாக விளையாடி வந்துள்ளார் நார்வேயின் ஹாலண்ட். இவரின் விளையாட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்கள் கண்டு களித்த நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர்களை நினைவூட்டுகிறது.

யுனைடெட்டிற்கு வெற்றி, ரொனால்டோவிற்கு நிம்மதி

டிராஸ்போல் (ட்ரான்ஸ்னிஸ்டிரியா): யுயேஃபா யூரோப்பா லீக் போட்டியின் 'இ' பிரிவு ஆட்டத்தில் மொல்டோவாவின் ஷெரிஃப் டிராஸ்போலை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்.

ஆட்டத்தில் இப்பருவத்தில் தனது முதல் கோலைப் போட்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்). பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ரொனால்டோ யுனைடெட்டின் இரண்டாவது கோலைப் போட்டார். முதல் கோலைப் போட்டவர் இந்தப் பருவத்தில் சிறப்பாக ஆடிவரும் ஜேடன் சாஞ்சோ.