லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மத்தியப் பகுதியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கத்திக் குத்து தாக்குதலுக்கு ஆளாயினர். அச்சம்பவம் பிரிட்டிஷ் நேரப்படி நேற்று காலை ஆறு மணியளவில் நிகழ்ந்தது.
தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சந்தேக நபரான ஓர் ஆடவர் 'டேசர்' கருவியால் செயலிழக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எலிசபெத் அரசியாரின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தொலைவில் இருக்கும் லெஸ்டர் சதுக்கத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

