கொழும்பு: இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில் அந்நாட்டில் முன்னாள் அதிபர் சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் ஈஸ்டர் நாளன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 270 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அப்போது பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தேக நபராக இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறவுள்ளதாக தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை அறிக்கைகளை மைத்ரிபால சிறிசேனா புறக்கணித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அக்டோபர் 14-ம் தேதி மைத்ரிபால சிறிசேனா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

